விஜய்க்கு இதுவொரு போக்கிரி பொங்கல், மாஸ்டர் பொங்கல்: பிரபல இயக்குனர் பாராட்டு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் இன்று வெளியாகி பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்களையும் ஒருசில கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ரிசல்ட் எப்படி இருந்தாலும் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பின்னர் திரையரங்குகளில் திருவிழா காலம் போல் இன்று கூட்டம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்த பிரபல இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் ’மாஸ்டர்’ படத்தை பாராட்டி உள்ளார். எங்களது ஊரில் முதல் நாள் முதல் காட்சியை விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை பார்த்தேன். ஒரு வருடம் கழித்து மறுபடியும் திருவிழாவுக்கு வந்தது போன்ற ஒரு உணர்வு இருந்தது.
‘துப்பாக்கி’ திரைப்படத்திற்கு பிறகு விஜய்யின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம்’மாஸ்டர்’ தான். விஜய் அவர்களுக்கு ஒரு மாஸ்டர் பீஸாக ’மாஸ்டர்’ படம் இருக்கும். விஜய் மிகவும் பிரமாதமாக நடித்துள்ளார். இந்த மாதிரி ஒரு திரைக்கதையை விஜய் அவர்களுக்கு லோகேஷ் கனகராஜ் செய்ததற்கு வாழ்த்துக்கள். அவர் திரைக்கதையை கையாண்ட விதமும் ஒவ்வொரு கேரக்டரையும் கையாண்ட விதமும் மிகவும் அருமை. குறிப்பாக விஜய் சேதுபதி கேரக்டரை அவர் மிக அழகாக கையாண்டுள்ளார். ஒவ்வொரு காட்சியையும் வில்லத்தனத்தையும் ரசிக்கும் வகையில் செய்துள்ளார்.
கண்டிப்பாக இந்த படம் இந்த பொங்கலுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது இந்த படம் போக்கிரி பொங்கல் ஆகவும் மாஸ்டர் பொங்கலாகவும் விஜய் அவர்களுக்கு இருக்கும் என்றும் விஜய் ரசிகர்களுக்கும் விஜய் அவர்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் இயக்குனர் லோகேஷ் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
சுசிந்திரன் நடிப்பில் சிம்பு நடிப்பில் உருவான ‘ஈஸ்வரன்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#firstdayfirstshow #master படம் பார்த்தேன்.ஒரு வருடம் கழித்து மீண்டும் திருவிழாகோலம். #vijay சாருக்கு இது ஒரு மாஸ்டர் பீஸ். @Dir_Lokesh ஸ்கிரீன்பிளே பிரமாதம்.வில்லதனத்தை ரசிக்கிறமாதிரி விஜய்சேதுபதி பண்ணிருக்கிறாரு. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. #eeswaran டைரக்டர் #Suseinthiran pic.twitter.com/Hk7YSlG6AJ
— Johnson PRO (@johnsoncinepro) January 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments