அனிதாவின் மரணம் அர்த்தமுள்ளதாக மாற வேண்டும் : இயக்குனர் சுசீந்திரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
டாக்டர் கனவு, நீட் தேர்வு காரணமாக கனவாகவே போனதால் இன்று காற்றில் கலந்துவிட்டது அனிதாவின் ஆத்மா. அந்த ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய மரணம் அர்த்தமுள்ளதாக மாற வேண்டும் என்றும் அதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்றும் இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார். 'வெள்ளை நிற உடை அணிந்த கடவுள்' என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.
நாம் இன்று அனிதா என்ற ஒரு பெண்ணை இழக்கவில்லை, வருங்காலத்தில் 1000-க்கும் மேற்பட்ட உயிரை காப்பாற்றியிருக்க கூடிய ஒரு நல்ல டாக்டரை இழந்துவிட்டோம். வரட்டு கெளரவத்திற்காகவும், பணம் சம்பாதிக்க மட்டும் டாக்டருக்கு படிக்கும் இந்த கேடுகெட்ட சமுதாயத்தில் இன்று நாம், சேவை செய்யும் மனப்பான்மை உடைய உன்னதமான ஒரு டாக்டரை இழந்துவிட்டோம். இந்த இழப்பு பணம் படைத்தவர்களுக்கு அல்ல....
அனிதாவை போல் உள்ள ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளை நாம் டாக்டர்களாக உருவாக்க நீட் தேர்வை எதிர்த்து நாம் இன்று அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவோம். அனிதாவின் மரணம் அர்த்தமுள்ளதாக மாற வேண்டும் என்றால் ஒன்று சேருவோம், போராடுவோம்.
— Suseenthiran (@dir_susee) September 3, 2017
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments