நான் கொடுத்த பணத்திற்கு முதல் பாதியே சரியா போச்சு: 'தர்பார்' குறித்து பிரபலை இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெளியான ’தர்பார்’ திரைப்படம் உலகம் முழுவதும் பெருவாரியான வசூலை குவித்து வருகிறது. இந்தப் படத்தின் முதல் நாள் வசூலுக்கு இணையாக நான்காவது நாள் வசூலும் இருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன
இந்த நிலையில் இந்த படத்தை வேண்டுமென்றே தோல்வியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருவதாகவும், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் இந்த படத்தை பகிர இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்து இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ’தர்பார்’ திரைப்படம் குறித்து சிலர் வேறு வேண்டுமென்றே தவறான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏஆர் முருகதாஸ் அவர்களும், ரஜினிகாந்த் அவர்களும் சேர்ந்து இந்த பொங்கல் திருவிழாவிற்கு சிறப்பான பொழுதுபோக்கு திரைப்படத்தை தந்துள்ளனர். பல வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் அவர்களின் எனர்ஜியை பார்க்க முடிகிறது. நான் தந்த டிக்கெட் பணத்திற்கு முதல் பாதி பார்த்தவுடன் முழு திருப்தி அடைந்து விட்டேன்.
கோமாளி படத்திற்கு பிறகு யோகிபாபு, ரஜினி அவர்களுடன் இணைந்து கொண்டாட்டமாக நடித்துள்ளார். ரஜினியின் மகளாக நடித்திருக்கும் நிவேதா தாமஸ் நடிப்பு மிக அருமையாக உள்ளது. இருவருடைய கெமிஸ்ட்ரி மிகவும் அழகாகவும் எமோஷனல் காட்சிகளாகவும் இருந்தது சூப்பர். இந்த படத்தை ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துடன் திரையரங்குகளில் பார்க்க வேண்டும். இவ்வாறு இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments