அஜித் மீது பெரிய மரியாதை ஏற்பட இதுதான் காரணம்: இயக்குனர் சுசீந்திரன்
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் பிறருக்கு செய்த உதவிகள் அளவற்றதாக இருந்தாலும் அவை பெரும்பாலும் வெளியில் தெரிவது இல்லை. உதவி பெற்றவரே ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கூறும்போதுதான் அஜித் செய்த உதவிகள் தெரியவருகிறது. அந்த வகையில் இதுவரை வெளிவராத அஜித் செய்த ஒரு உதவி குறித்து இயக்குனர் சுசீந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
நான் உதவி இயக்குனராக பணியற்றி கொண்டிருக்கும்போது எனது நண்பன் உதவி இயக்குனர் ரோஜா ரமணன் சிறுநீரக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். அவனது ஆபரேசனுக்கு ரூ.3 லட்சம் பணம் தேவைப்பட்டது. நானும் எனது நண்பர்களும் சேர்ந்து சினிமா துறையில் உள்ள அனைவரிடமும் பண உதவி பெற்றோம்
அப்பொழுது தான் முதன்முதலில் 'ஜனா' படத்தின் படப்பிடிப்பில் அஜித் அவர்களை சந்தித்தேன். ரோஜாரமணனின் நிலையை கூறினேன். அப்பொழுதே முகம் தெரியாத சக தொழிலாளிக்கு அதிக பணம் கொடுத்து உதவியவர் அஜித் அவர்கள்தான். அன்று முதல் அஜித் அவர்கள் மேல் எனக்கு பெரிய மரியாதை உண்டு. அஜித் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com