முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இயக்குனர் சுசீந்திரன் வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அன்றாட செலவுக்கே திண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளி திறந்தவுடன் அனைத்து பெற்றோர்களுக்கும் கல்விக்கட்டணம் கட்டவேண்டிய ஒரு பெரிய செலவு உள்ளது. ஒரு மாதம் வருமானம் இன்றி இருக்கும் நிலையில் சாப்பாட்டுக்கே பலர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் கல்வி கட்டணம் கட்டுவது பல பெற்றோர்களுக்கு திண்டாட்டம் தான்
இந்த நிலையில் இதுகுறித்து பிரபல இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
உயர்திரு எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் அவர்களுக்கு, பெரும்பான்மையான மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் மாணவ, மாணவிகளின் கல்வி கட்டணம் கட்ட இயலாமல் தவிக்கிறார்கள். எனவே தாங்கள் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனியார் மற்றும் அரசு கல்வி கட்டணங்களை செலுத்த 3 மாதங்கள் கால அவகாசம் பெற்றோர்களுக்கு தர அனுமதி வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்’ என்று இயக்குனர் சுசீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments