முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இயக்குனர் சுசீந்திரன் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் அன்றாட செலவுக்கே திண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளி திறந்தவுடன் அனைத்து பெற்றோர்களுக்கும் கல்விக்கட்டணம் கட்டவேண்டிய ஒரு பெரிய செலவு உள்ளது. ஒரு மாதம் வருமானம் இன்றி இருக்கும் நிலையில் சாப்பாட்டுக்கே பலர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் கல்வி கட்டணம் கட்டுவது பல பெற்றோர்களுக்கு திண்டாட்டம் தான்

இந்த நிலையில் இதுகுறித்து பிரபல இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

உயர்திரு எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் அவர்களுக்கு, பெரும்பான்மையான மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் மாணவ, மாணவிகளின் கல்வி கட்டணம் கட்ட இயலாமல் தவிக்கிறார்கள். எனவே தாங்கள் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனியார் மற்றும் அரசு கல்வி கட்டணங்களை செலுத்த 3 மாதங்கள் கால அவகாசம் பெற்றோர்களுக்கு தர அனுமதி வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்’ என்று இயக்குனர் சுசீந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

More News

பிரிட்டன் இளவரசரை அடுத்து பிரதமருக்கும் கொரோனா!

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், ஏழை பணக்காரர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என எந்தவித பேதமும் இன்றி சாதாரண குடிமகன் முதல் விவிஐபி வரை அனைவரையும் தாக்கி வருகிறது.

10 மாத குழந்தைக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல் 

பொதுவாக கொரோனா வைரஸ் வயதானவர்களை தாக்கி வருவதாக மருத்துவர்கள் கூறி வருகின்றனர். வயதானவர்களுக்கு சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய்

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு: மத்திய அரசுக்கு சரத்குமாரின் வேண்டுகோள்

இன்று காலை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் செய்தியாளர்களை சந்தித்து ஒருசில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

கொரோனா எதிரொலி: எல்லையை இழுத்து மூடிய தமிழக கிராமம்

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க ஒவ்வொருவரும் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அரசு தீவிரமாக வலியுறுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள ஒரு கிராமமே தன்னை தனிமைப்படுத்தி கொள்வது

அணுவை விடவும் சிறியது, அணுகுண்டை போல் கொடியது: வைரமுத்துவின் கொரோனா பாடல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை கவியரசு வைரமுத்து எழுதியுள்ளார்.