close
Choose your channels

பிரபல தமிழ் இயக்குனர் விபத்தில் சிக்கி காயம்: மருத்துவமனையில் அனுமதி!

Friday, January 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ் இயக்குனர் ஒருவருக்கு இன்று காலை விபத்து ஏற்பட்டு கை எலும்பு முறிவு ஏற்பட்டதால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இயக்குனராக அறிமுகமாகி அதன் பின்னர் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சுசீந்திரன். இயக்குனர் சுசீந்திரன் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டிருக்கும் போது திடீரென ஒரு வாகனம் அவர் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது

இந்த விபத்தில் படுகாயமடைந்த சுசீந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கை எலும்பு முறிந்து உள்ளதாகவும் அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் மருத்துவர்கள் அவரை மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இயக்குனர் சுசீந்திரனுக்கு ஏற்பட்டுள்ள விபத்து குறித்து அறிந்ததும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் மருத்துவமனை சென்று அவரிடம் நலம் விசாரித்து வருகின்றனர். அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment