சூர்யா-ஜோதிகாவுக்கு பிரபல இயக்குனர் வாழ்த்து

  • IndiaGlitz, [Friday,September 15 2017]

பிரபல இயக்குனர் சுசீந்திரன் நல்ல படங்கள் வரும்போதெல்லாம் வாழ்த்து தெரிவித்து வருவதை ஒரு வழக்கமாக கொண்டிருக்கும் நிலையில் இன்று வெளியாகியுள்ள 'மகளிர் மட்டும்' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள வாழ்த்து கடிதம் ஒன்றில் கூறியிருப்பதாவது: இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் இன்று வெளியாகும் 'மகளிர் மட்டும்' மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள். சிறந்த படங்களை தயாரித்து கொண்டிருக்கும் சூர்யா மற்றும் ஜோதிகா இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்

'குற்றம் கடிதல்' மிகவும் நான் ரசித்த திரைப்படம். இந்த திரைப்படமும் அவருக்கு மிகப்பெரிய வரவேர்பை தரும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்

இவ்வாறு இயக்குனர் சுசீந்திரன் தனது வாழ்த்து கடிதத்தில் தெரிவித்துள்ளார். இயக்குனர் சுசீந்திரன் ஏற்கனவே 'நெஞ்சில் துணிவிருந்தால்' என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டு தற்போது 'ஏஞ்சலினா' என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.