வடிவேலுக்கு கண்டனம் தெரிவித்த மற்றொரு இயக்குனர்!
- IndiaGlitz, [Tuesday,June 11 2019]
ஒரு திரைப்படத்திற்கு இயக்குனர் என்பவர் முதுகெலும்பு போன்றவர். அவர் இல்லாமல் ஒரு படம் உருவாக முடியாது. எனவேதான் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி முதல் முன்னணி நடிகர்கள் பலர் இயக்குனர்களுக்கு பெரும் மரியாதை கொடுப்பார்கள். ஆனால் நடிகர் வடிவேலு தன்னை கதாநாயகனாக்கி அழகு பார்த்த ஒரு இயக்குனரை ஒருமையில் பேசியது அனைத்து இயக்குனர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
ஏற்கனவே சமுத்திரக்கனி, நவீன், விஜய் மில்டன் உள்பட ஒருசில இயக்குனர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது இயக்குனர் சுசீந்திரனும் வடிவேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
வடிவேலு அவர்கள் 23ஆம் புகேசி இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஷங்கர் அவர்கள் குறித்து பேசிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இயக்குனர் சிம்புதேவன் 23ஆம் புலிகேசி மூலம் இயக்குனராக அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே மாபெரும் வெற்றிபடத்தை நமக்கு தந்தார். அதன்பிறகும் பல தரமான திரைப்படங்களை நமக்கு தந்துள்ளார்.
ஒரு இயக்குனரை அவன், இவன் என்று மரியாதை இல்லாமல் பேசி இருப்பது மிகவும் தவறான அணுகுமுறை. புலிகேசிக்கு பிறகு அவர் ஹீரோவாக நடித்த 'இந்திரலோகத்தில் அழகப்பன், எலி, தெனாலிராமன் படங்களின் ரிசல்ட் தமிழ்த்திரையுலகம் அனைவருக்கும் தெரியும். ஒரு இயக்குனர் என்ற முறையில் வடிவேலு அவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்' என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
#DontForget the creators pic.twitter.com/YA0puHJ4wz
— Suseenthiran (@dir_susee) June 11, 2019