சாலை விபத்தில் முன்னணி இயக்குனரின் மகன் உயிரிழப்பு...!
Send us your feedback to audioarticles@vaarta.com
பைக்கில் வேகமாகச் சென்றதில் இயக்குனரின் மகன் உயிரிழந்த சம்பவம், திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட சினிமாவில், பிரபல இயக்குனராக வலம் வருபவர் சூர்யோதே பெரம்பள்ளி. இவரின் 20 வயது மகன் மயூர், கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு பைக்கில் அதிவேகமாக சென்றுள்ளார். அப்போது பைக், லாரி மீது மோதியதில் அவர் விபத்துக்குள்ளானார். இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே, மயூர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அதிவேகமாக இளைஞன் பைக் ஓட்டி வந்ததுதான், விபத்திற்கு காரணம் என தெரிய வந்தது. இச்சம்பவம் கன்னட திரையுலகினரை மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரபலங்கள் பலரும் இயக்குனருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com