கலைப்புலி எஸ்.தாணுவின் அடுத்த முயற்சி: வாழ்த்து தெரிவித்த இயக்குனர் சுப்பிரமணியம் சிவா

பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவின் அடுத்த முயற்சிக்கு இயக்குனர் சுப்பிரமணியம் சிவா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரை உலகில் ’யார்’ என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் கலைப்புலி எஸ் தாணு. அதன்பின் பல வெற்றி படங்களை தயாரித்தார் என்பதும் இவரது தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய அளவில் புரமோஷன்கள் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் தயாரித்த ’தெறி’ ‘கபாலி’ ‘அசுரன்’ ’கர்ணன்’ உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது அவர் ’நானே வருவேன்’ ’வாடிவாசல்’ உட்பட ஒரு சில படங்களை தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ஆம்பூரில் முருகன் - கார்த்திகேயன் என்ற திரையரங்குகளை திறக்கவுள்ளார். இதற்கு வாழ்த்து தெரிவித்து இயக்குனர் சுப்பிரமணியம் சிவா கூறியிருப்பதாவது:

கனவுகளை சிந்தனைகளாக்கி, சிந்தனைகளை செயல்களாக்கி, செயல்களை சாதனைகளாக மாற்ற தெரிந்த ஆற்றல் வீரர். தயாரிப்பாளர்களில் சூப்பர் ஸ்டார் எங்கள் கலைப்புலி எஸ். தாணு ஐயா, இன்று அமர்களமாக ஆம்பூரில் துவங்கும் முருகன்-கார்த்திகேயன் திரையரங்கள் மாபெரும் வசூல் சாதனைகள் படைக்க.. திரைத்துறை செழிக்க.. 'வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.
 

More News

பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா கங்குலி? வைரல் டுவிட்!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலி சற்று முன் பதிவு செய்த டுவிட்டரில் இருந்து அவர் பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறாரா?

உலகத்திலேயே ரொம்ப விசித்திரமானது மனிதனோட மூளை: 'பொம்மை' டிரைலர்

இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யாவின் அடுத்த திரைப்படமான 'பொம்மை'  படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பாடகர் கேகே பாடிய கடைசி தமிழ்ப்பாடல்: 'தி லெஜண்ட்' இயக்குனர்கள் பகிர்ந்த வீடியோ!

பிரபல பாடகர் கேகே திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார் என்பதும் அவருக்கு பிரதமர் மோடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம். தமிழ் உள்பட 11 இந்திய மொழிகளில்

'பரத் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு: த்ரில்லான மோஷன் போஸ்டர்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் பரத், தற்போது 50வது படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

ரஜினி, அஜித், விஜய் செய்யாததை 'விக்ரம்' படத்திற்காக செய்யும் கமல்ஹாசன்!

 தமிழ் திரை உலகை பொறுத்தவரை மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது அந்த படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின் உள்பட படக்குழுவினர் முதல் நாள் முதல் காட்சி அன்று திரையரங்குக்கு