வாழும் போதே தாய், தந்தையை சொர்கத்தில் வாழ வைக்கும் தனுஷ்: பிரபல இயக்குனர் பாராட்டு..!

  • IndiaGlitz, [Sunday,February 19 2023]

தாய் தந்தையர் வாழும் போதே அவர்களை சொர்க்கத்தில் வைத்து காக்கும் பிள்ளைகள் தெய்வமாக உணரப்படுகிறார்கள் என நடிகர் தனுஷை பிரபல இயக்குனர் சுப்பிரமணியன் சிவா தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் சென்னையில் உள்ள போயஸ் கார்டன் பகுதியில் மிகவும் பிரமாண்டமாக ஒரு வீடு கட்டிக் கொண்டிருந்தார் என்ற செய்தி ஏற்கனவே வெளியானது. இந்த நிலையில் தற்போது அந்த வீட்டின் பணிகள் முடிவடைந்து கிரகப்பிரவேசம் ஆகி உள்ள நிலையில் இந்த வீடு குறித்து இயக்குனர் சுப்பிரமணியன் சிவா கூறியதாவது:

தம்பி தனுஷின்
புதிய வீடு…
கோவில் உணர்வு
எனக்கு..😊
வாழும் போதே
தாய்,தந்தையை
சொர்கத்தில் வாழ
வைக்கும் பிள்ளைகள்,
தெய்வமாக
உணர படுகிறார்கள்…😊
மேலும்,
தன் பிள்ளைகளுக்கும்,
மற்றவர்களுக்கும்,
எடுத்துகாட்டாகவும்,
உதாரணமாகவும்,
உயர்ந்து விடுகிறார்கள்..💕
இன்னும்
பல வெற்றிகளும்
சாதனைகளும்
உன்னை துரத்தட்டும்,
உன்னை பார்த்து ஏங்கட்டும்,
உன்னை கண்டு வியக்கட்டும்,
வாழ்க தம்பி,
வாழ்வாங்கு வாழ்க..

தனுஷ் நடித்த ’திருடா திருடி’ ’சீடன்’ உள்ளிட்ட படங்களை சுப்பிரமணிய சிவா இயக்கி உள்ளார் என்பதும், தனுஷின் ரசிகர் மன்ற தலைவராக சுப்பிரமனிய சிவா உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.