எஸ்.எஸ்.ராஜமெளலி வெளியிடும் 'பிரம்மாஸ்திரம்': ரிலீஸ் தேதி அறிவிப்பு!
- IndiaGlitz, [Saturday,December 18 2021]
இந்திய திரையுலகை திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் உருவாக்கப்படும் திரைப்படமான ’பிரம்மாஸ்திரம்’ என்ற படத்தை தென்னிந்திய மொழிகளில் பிரபல இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி அவர்கள் வெளியிட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
அமிதாபச்சன், கரன் ஜோகர், நாகார்ஜுனா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் ’பிரம்மாஸ்திரம்’. மூன்று பாகங்களாக உருவாக உள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு செப்டம்பர் ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி அவர்கள் வெளியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் குறித்து எஸ்.எஸ்.ராஜமெளலி அவர்கள் கூறியிருப்பதாவது
’பிரம்மாஸ்திரம்’ திரைப்படத்தை நான்கு தென்மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். ’பிரம்மாஸ்திரம்’ படத்தின் கரு தனித்துவமானது, இது கதை மற்றும் காட்சியிலும் பிரதிபலிக்கிறது. பல வழிகளில், இது பாகுபலியின் உழைப்பையும், காதலையும் எனக்கு நினைவூட்டுகிறது. நான் பாகுபலிக்கு செய்ததைப் போலவே, பிரம்மாஸ்திரம் திரைப்படத்தை உருவாக்குவதில் அயன் அதிக நேரத்தை செலவிடுவதையும், அதைச் சரியாகப் உருவாக்குவதில் காட்டும் பொறுமையையும் நான் பார்த்துகொண்டிருக்கிறேன்.
இந்தத் திரைப்படம் பழங்கால இந்தியப் பண்பாட்டின் கருப்பொருளை, நவீன தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன VFX உடன் இணைத்து உங்கள் மனதைக் கவரும் வைகையில் உருவாக்கபட்டுள்ளது!
எனது திரைப்பயணத்தில், நான் நினைத்து மகிழக்கூடிய ஒன்றாக அயனின் சினிமா இருக்கும். அயனின் பார்வை இந்திய சினிமாவில் ஒரு புதிய அத்தியாயமாக இருக்கும்,
மேலும் பாகுபலிக்குப் பிறகு தர்மா புரடொக்சன்ஸ் உடன் மீண்டும் இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். கரண் நல்ல படங்களை கண்டுணர்வதில் ஆழ்ந்த புரிதலும், உணர்வும் கொண்டவர், அவருடன் மீண்டும் சேர்ந்து, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ உடன் இணைந்து இந்தப் படத்தை வழங்குவதில் பெருமைப்படுகிறேன்.
HERE IT IS... 'BRAHMASTRA' MOTION POSTER... #Brahmastra Part One: #Shiva stars #AmitabhBachchan, #RanbirKapoor, #AliaBhatt, #MouniRoy and #Nagarjuna... Directed by #AyanMukerji... 9 Sept 2022 release. pic.twitter.com/N73mxX7Lnr
— taran adarsh (@taran_adarsh) December 15, 2021