எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்

  • IndiaGlitz, [Friday,October 13 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்களும் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி சுமார் ரூ.2000 கோடி வசூலை நெருங்கியது. இதனையடுத்து அவர் இயக்கவுள்ள அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் அவர் இயக்கவுள்ள இரண்டு படங்கள் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது.

வரும் 2018ஆம் ஆண்டு டிவிவி தனய்யா தயாரிப்பில் ஒரு சமூக பிரச்சனையை அலசும் படத்தை எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதேபோல் 2019ஆம் ஆண்டு மகேஷ்பாபு நடிப்பில் கே.எல்.நாராயணா தயாரிக்கும் படம் ஒன்றையும் இயக்க எஸ்.எஸ்.ராஜமெளலி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த இரண்டு படங்களும் குறுகிய கால படங்களாகவும், அதிக கிராபிக் காட்சிகள் இல்லாத படங்களாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ரசிகர்களை குளிர்விக்க தயாரிப்பாளர் சங்கத்தின் அதிரடி திட்டம்

ஜிஎஸ்டி வரி, மாநில அரசின் கேளிக்கை வரி ஆகியவை திரையுலகினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளதால் இந்த சுமையை படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் தலையில் தான் சுமத்த வேண்டிய கட்டாயத்தில் திரையுலகினர் உள்ளனர்.

மெர்சல் காளையுடன் இணையும் துள்ளி வரும் மான்

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் அனைத்து தடைகளையும் தகர்த்து வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவருவது உறுதி என்றும், தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார்

பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து மீண்டும் இணையும் ஓவியா-சினேகன்

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருசிலருக்கு மிகப்பெரிய புகழும், ஒருசிலருக்கு கடுமையான விமர்சனங்களும் கிடைத்தது.

புதுப்படங்கள் ரிலீஸ் தடை எதிரொலி: மீண்டும் ரிலீஸ் ஆகும் 'தரமணி'

கேளிக்கை வரி பிரச்சனை காரணமாக புதிய திரைப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்த நிலையில் தற்போது ஏற்கனவே ரிலீஸ் ஆன விவேகம், ஸ்பைடர், கருப்பன், ஹரஹர மகாதேவி

தலைமை செயலகத்தில் டெல்லி முதல்வரின் கார் திருட்டு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் புளூவேகன் கார் தலைமைச்செயலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அந்த கார் திடீரென மர்ம நபர்களால் திருடுபோயுள்ளது.