இந்திய அளவில் எஸ்.எஸ்.ராஜமெளலி செய்த சாதனை: குவியும் வாழ்த்துக்கள்!

இந்திய அளவில் இதுவரை இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ள நிலையில் தற்போது 1,000 கோடி ரூபாய் வசூல் பட்டியலில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் இணைந்துள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது

கடந்த மார்ச் 24ஆம் தேதி இந்தியா உள்பட உலகம் முழுவதும் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் இருந்து ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் தேஜா நடிப்பில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வெளியானது. இந்த படம் முதல் நாளில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலில் சாதனை செய்த நிலையில் ஒரே வாரத்தில் 500 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்து திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது

இந்த நிலையில் சற்று முன் இந்த படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய திரையுலகில் இதுவரை அமீர்கானின் ‘டங்கல்’ மற்றும் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ இரண்டு திரைப்படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி வசூல் செய்துள்ள நிலையில் அந்தப் பட்டியலில் தற்போது ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் இதுவரை மூன்று படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி வசூல் செய்துள்ள நிலையில் அவற்றில் இரண்டு படங்கள் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய படம் என்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

More News

'நானே வருவேன்' படக்குழுவில் இருந்து பிரிந்தார் நாயகி: வைரல் புகைப்படம்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் 'நானே வருவேன்' திரைப்படத்தின் குழுவிலிருந்து விடைபெற்று கொள்வதாக நாயகி எல்லி அவ்ரம் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டு

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்': குவைத்தை அடுத்து மேலும் ஒரு நாட்டில் தடை!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தின்  முன்பதிவு தொடங்கிவிட்டது என்பதும் முதல் 3 நாட்களுக்கான

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' 10ஆம் பாகத்தில் 'கேப்டன் மார்வெல்' நடிகை: வின்டீசல் அறிவிப்பு

 உலகம் முழுவதும் ஆக்சன் ரசிகர்களால் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படம் 'பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' படத்தின் தொடர் படங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 2001ஆம் ஆண்டில் 'பாஸ்ட் அண்ட்

பூஜா ஹெக்டேவிடம் விஜய்யின் கிண்டலான காதல்: சன் பிக்சர்ஸ் வெளியிட்ட வீடியோ

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வரும் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை விறுவிறுப்பாக சன்பிக்சர்ஸ் செய்து வருகிறது.

'திரெளபதி' இயக்குனரின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகர்!

 'பழைய வண்ணாரப்பேட்டை' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மோகன் ஜி அதன் பின்னர் 'திரௌபதி' 'ருத்ரதாண்டவம்' ஆகிய படங்களை இயக்கினார்.