close
Choose your channels

சாவித்ரியை மீண்டும் உயிருடன் கொண்டு வந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ்: பிரமாண்ட இயக்குனர் பாராட்டு

Wednesday, May 9, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'மகாநதி என்ற திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தமிழ்ப்பதிப்பான 'நடிகையர் திலகம்' திரைப்படம் வரும் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தில் சாவித்ரி கேரக்டரில் நடித்துள்ள கீர்த்திசுரேஷுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சாவித்ரி மற்றும் ஜெமினி கணேசன் கேரக்டருக்கு கீர்த்தி சுரேஷ் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோர் மிகப்பொருத்தமான தேர்வு என்று பலர் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது சமூக வலைத்தளத்தில் நடிகை கீர்த்திசுரேஷூக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷின் மிக அருமையான நடிப்பை நான் வேறு எந்த படத்திலும் பார்த்தது இல்லை. இது அவரது கேரக்டரை ஏற்று நடித்த நடிப்பு அல்ல, சாவித்ரியை உயிருடன் மீண்டும் திரைக்கு கொண்டு வந்துள்ள நடிப்பு. மேலும் இந்த படத்தில் மிக அருமையாக நடித்த துல்கர் சல்மானின் ரசிகராக நான் மாறிவிட்டேன்' என்று இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தெரிவித்துள்ளார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment