எஸ்.எஸ்.ராஜமெளலியின் சரித்திர படத்தில் விஜய்?

  • IndiaGlitz, [Saturday,April 02 2016]
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் இளையதளபதி ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. \

'பாகுபலி 2' படத்தை முடித்தவுடன் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கவுள்ள சோழப்பேரரசன் கரிகால் சோழன் கதையில் விஜய் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இதுகுறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ரூ.200 கோடி பட்ஜெட்டில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிக்கவுள்ள இந்த படத்தில் மோகன்லால் மற்றும் சுதீப் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாகவும், தீபிகா படுகோனே அல்லது பிரியங்கா சோப்ரா இந்த படத்தின் நாயகி வேடத்திற்கு பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்தும் சோழப்பேரரசன் கதையில் விரைவில் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், விஜய்யும் சோழப்பேரரசனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு பெரிய ஸ்டார்களும் சரித்திர படத்தில் நடிக்கவுள்ளது கோலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

போதையுடன் கூடிய அதர்வாவின் அடுத்த பட டைட்டில்

அதர்வா முரளி நடித்த முதல் படமான 'பாணா காத்தாடி' படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் மீண்டும் அதர்வாவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தை அதர்வா புதியதாக தொடங்கிய தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'கிக் ஆஸ் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்....

தனுஷின் 2 படங்களை ரீமேக் செய்யும் ரஜினி தயாரிப்பாளர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'லிங்கா' படத்தை தயாரித்தவர் ராக்லைன் வெங்கடேஷ்....

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் கார்த்தி படம்

கார்த்தி, நாகார்ஜூனா, தமன்னா நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'தோழா' திரைப்படம்...

விஷாலின் அடுத்த படத்தில் இணைந்த அனிருத்

விஷால், ஸ்ரீதிவ்யா நடிப்பில் 'கொம்பன்' இயக்குனர் முத்தையா இயக்கியுள்ள 'மருது' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.....

'தெறி'யில் இன்னொரு போனஸ். ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட புதிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மாஸ் ஹிட்டானது அனைவருக்கும் தெரிந்ததே...