விக்னேஷ் சிவன் - நயன்தாரா என்னை ஏமாற்றிவிட்டார்கள்: தமிழ் இயக்குனர் ஆவேசம்..!

  • IndiaGlitz, [Sunday,November 17 2024]

நடிகை நயன்தாரா, தனுஷ் மீது குற்றச்சாட்டு சுமத்தி 3 பக்கங்கள் அறிக்கை நேற்று வெளியிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இயக்குனர் எஸ்.எஸ்.குமரன் என்பவர், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருமதி நயன்தாரா அவர்களுக்கு வணக்கம்.

மூன்று வினாடி காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டு திரு. தனுஷ் அவர்கள் உங்கள் மீது வழக்கு தொடர்ந்ததால்வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு LIC என்ற என் தலைப்பை உங்கள் கணவர் திரு. விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.

LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த திரு.விக்னேஷ் சிவன் தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம்.

என் கதைக்கும் அந்தத் தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் LIC என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில் பதில் அளித்தும் அதிகார தன்மையுடன் அதே தலைப்பை தன் படத்திற்கு திரு.விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால், 'உன்னால் என்ன பண்ண முடியும்' என்ற அதிகார நிலை தானே காரணமாய் இருக்க முடியும். அதற்கு எந்தக் கடவுள் மன்றத்தில் திரு.விக்னேஷ் சிவன் பதில் சொல்ல சொல்வீர்கள்.

உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரதோடு நடந்து கொண்டு, என்னை மன உளைச்சல் ஆக்கியதற்கு நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்.

இப்பொழுது வரை அந்த தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. என் படத்தையும் அது பாதிப்படையச் செய்திருக்கிறது. எந்தப் படைப்பாளியும் தன் படைப்பைப் பல காரணங்களோடும் பல பொருட்செலவோடும் தான் கட்டமைக்கிறார்கள். நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்தும் பட்சத்தில் முறையான அனுமதி யோடும் முறையான மதிப்பூதியத்தோடும் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தைக் கைக்கொள்ள வேண்டும்.

நீங்கள் இங்கு எதையும் இலவசமாக செய்யவில்லை. எங்கள் படப்புகளை மட்டும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்பூலகதிற்கு மிக மோசமான வழிக்காட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனங்காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க.

 

More News

இனி 5 வகையான சென்சார் சான்றிதழ்.. மத்திய தணிக்கை குழு அறிவிப்பு..!

மத்திய தணிக்கை குழு புதிய முறையில் திரைப்படங்களுக்கு சான்றிதழ்களை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் கைது.. நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவது எப்போது?

நடிகை கஸ்தூரி கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று அவர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டதாகவும், இதையடுத்து அவர் இன்று நீதிபதி முன் ஆஜர் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

செல்வ வளம் பெருக திருவண்ணாமலை குபேர கிரிவல ரகசியங்கள்!

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில், புகழ்பெற்ற ஆன்மீக பேச்சாளர் பவானி ஆனந்த் அவர்கள், திருவண்ணாமலை மற்றும் ரமண மஹரிஷி பற்றிய மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

உங்கள் வாழ்வை மாற்ற சித்தர் வழிபாட்டு ரகசியங்கள் !

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில், புகழ்பெற்ற ஆன்மீக பேச்சாளர் செல்வகுமார் அவர்கள் சித்தர்களைப் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

10 கோடி கேட்ட கிளிப் இதுதான்.. அன்பை பரப்புங்கள் சார்.. நயனை அடுத்து பதிலடி கொடுத்த விக்னேஷ் சிவன்..!

நயன்தாராவின் திருமண வீடியோ Netflix ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ள நிலையில், அதில் மூன்று நொடிகள் கொண்ட காட்சியை பயன்படுத்தியதற்காக தனுஷ் தரப்பில் 10 கோடி ரூபாய் கேட்டு