விஜய்சேதுபதி பட இயக்குனரின் 'மே தின வாழ்த்து செய்தி'

  • IndiaGlitz, [Friday,May 01 2020]

‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’, ‘பூலோகம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தற்போது விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் ‘லாபம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். சமூக சிந்தனை கொண்ட இவர் தற்போது மே தின வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:

உழைக்கும்‌ வர்க்கத்தின்‌ தியாகத்தையும்‌ வலிமையையும்‌ உணர்த்திய தினம்‌ இந்த மே தினம்‌. “உலக தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள்‌ என்ற காரல்‌ மார்க்ஸ்‌ அறைகூவல்‌ விடுத்த காரணத்தினாலோ, என்னவோ பலரும்‌ இதை கம்ப்யூனிஸ்ட்‌ போராட்டம்‌ இன்னும்‌ நினைத்துக்‌ கொண்டிருக்கிறார்கள்‌. ஆனால்‌ உண்மையிலே, இது மக்களின்‌ போராட்டம்‌. உழைக்கும்‌ வர்க்கம்‌ வென்ற ஒரு தினம்‌.

இன்று நாம்‌ கடைபிடிக்கும்‌ எட்டு மணி நேர வேலை என்பது, எத்தனை பெரிய போராட்டத்திற்கு பிறகு கிடைத்திருக்கிறது. இந்த தொழிலாளர்‌ தினம் தோன்றிய வரலாறு குறித்து ஒரு சிறு பார்வை இதோ:

18 ஆம்‌ நூற்றாண்டின்‌ இறுதியிலும்‌ - 19 ஆம்‌ நூற்றாண்டின்‌ ஆரம்பத்திலும் மிக வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில்‌ தொழிலாளிகள்‌ பலரும்‌ நாளொன்றுக்கு 12 முதல்‌ 18 மணி நேரக்‌ கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர்‌. இதற்கெதிரான குரல்களும்‌ பல்வேறு நாடுகளில்‌ ஆங்காங்கே எழ ஆரம்பித்தது. அமெரிக்காவில்‌ கப்பலில்‌ பணிபுரிந்த தச்சு தொழிலாளர்கள் தான் முதல்முறையாக வேலை நிறுத்தம்‌ செய்தனர்‌. அந்த தீப்பொறிதான்‌ பின்னாட்களில்‌ அமெரிக்காவையே உலுக்கியது. மிச்சிகனில்‌ மட்டும்‌ 40,000 தொழிலாளர்களும்‌, சிக்காகோவில் 70 ஆயிரத்திற்கும்‌ மேற்பட்ட தொழிலாளர்களும்‌ கலந்து கொண்டனர்‌.

1886ல்‌ நடந்த போராட்டம்‌ ஒன்றில்‌ நான்கு தொழிலாளர்கள்‌ காவல்‌ துறையினரின்‌ துப்பாக்கிச்‌ கட்டிற்குப்‌ பலியாயினர்‌. அந்த வழக்கில்‌ ஏழு பேருக்கு தூக்கு தண்டனை கூட வழங்கப்படது. அமெரிக்கா, இச்செயலுக்காக தன்‌ மன்னிப்பை கேட்டுக்‌ கொண்டது நினைவிருக்கலாம்‌.

1889ல் ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிச தொழிலாளர்களின் “சர்வதேச தொழிலாளர்‌ பாராளுமன்றம்‌” கூடியது. 18 நாடுகளில்‌ இருந்து 400 பிரதிநீதிகள்‌ இக்கூட்டத்தில்‌ பங்கேற்றனர்‌. பிரெட்ரிக்‌ ஏங்கெல்ஸ்‌ உட்பட பலர்‌ கலந்துகொண்ட இக்கூட்டத்தில்‌ கார்ல்‌ மார்க்ஸ்‌ வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச்‌ செல்வது என்றும்‌, சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில்‌ தொழிலாளர்கள்‌ இயக்கங்களை நடத்திட வேண்டும்‌ என்றும்‌ அறைகூவல்‌ விடப்பட்டது. இந்த அறைகூவலே மே முதல்‌ நாளை, சர்வதேச தொழிலாளர்‌ தினமாக, மே தினமாக அனுசரிக்க வழிவகுத்தது.

இந்தியாவில்‌ சென்னை மாநகரில்‌ முதன்முதலில்‌ தொழிலாளர்‌ தினம்‌ கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும்‌, தலைசிறந்த சீர்திருத்தவாதியும்‌ ம. சிங்காரவேலர்‌ 1923ல்‌ சென்னை உயர்நீதிமன்றம்‌ அருகே உள்ள கடற்கரையில்‌ தொழிலாளர்‌ தின விழாவைக்‌ கொண்டாடினார்‌. தொழிலாளரின்‌ வாழ்க்கையில்‌ ஒரு “லாப'கரமான இந்த தினத்தை போற்றுவோம்‌. 7ம்‌.

இவ்வாறு இயக்குனர் எஸ்பி ஜனநாதன் தெரிவித்துள்ளார்.

More News

சென்னை விடுதி அறையில் மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு

சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரி விடுதி அறையில் தங்கியிருந்த நிலையில் திடீரென அவர் மர்மமான முறையில் நேற்று இரவு மரணம் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அஜித் பிறந்த நாளில் விஜய் ரசிகர்கள் செய்த சாதனை

இன்று மே 1, தொழிலாளர் தினத்தில் தல அஜித்தின் பிறந்த நாள் என்பதும் இன்றைய அஜித்தின் பிறந்த நாளை அஜித் ரசிகர்கள் #HBDDearestThaIaAJITH என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர்

தனுஷின் 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்த தகவல்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜகமே தந்திரம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று

கொரோனா பாதிப்பு நேரத்திலும் படப்பிடிப்பை தொடங்கிய முதல் டீம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாக உலகெங்கிலும் திரைப்பட படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கில் கிளம்பிய முதல் பயணிகள் ரயில்: வெளிமாநில தொழிலாளர்களுக்கு விமோசனம்

ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் தமிழகம் உள்பட ஒவ்வொரு மாநிலத்திலும் சிக்கியிருந்த நிலையில், வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு