'தல அஜீத்துக்கு நன்றி கூறிய இயக்குனர் சிவா

  • IndiaGlitz, [Friday,November 27 2015]

கடந்த தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆன அஜீத்தின் 'வேதாளம்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகி ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சிறுத்தை சிவா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'தல அஜீத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


அஜீத்துடன் இணைந்து பணியாற்றிய 'வீரம்' மற்றும் 'வேதாளம்' ஆகிய இரண்டு படங்களுமே தனக்கு பெண்கள் மதிப்பில் மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தி தந்ததாகவும், இந்த படத்தின் வசனங்கள் பெண்களால் விரும்பப்பட்டதாகவும் கூறிய சிவா, இதற்காக அஜீத்துக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

வேதாளம்' படத்தில் இடம்பெற்ற 'ஒரு ஆம்பளையைக் காப்பாத்துனா ஒருத்தனைக் காப்பாத்துன மாதிரி. ஆனால் ஒரு பொண்ணைக் காப்பாத்துனா ஒரு பரம்பரையையே காப்பாத்துன மாதிரி' என்ற வசனமும், 'பொண்ணை கட்டிக் கொடுக்கறது ஆணை நம்பி மட்டும் இல்லை. வீட்ல இருக்கும் பொண்ணுங்களை நம்பியும்தான்' என்ற வசனமும் பெண்கள் மத்தியில் பெரும் வரவெற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல் 'வீரம்' படத்தின் ஒருசில வசனங்களும் பெண்களை கவர்ந்ததால் தற்போது இரண்டு படங்களுக்கும் சேர்த்து இயக்குனர் சிவா நன்றி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

More News

பரதன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்த விஜய்

இளையதளபதி விஜய் நடிக்கவுள்ள 60வது படத்தை 'அழகிய தமிழ்மகன்' இயக்குனர் பரதன் இயக்குவார் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது...

'ரஜினிமுருகன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு?

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'ரஜினிமுருகன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதமே ரிலீஸ் ஆகவேண்டிய நிலையில்...

'மனம்' தமிழ் ரீமேக்கில் சிவகுமார்-சூர்யா-கார்த்தி?

சூர்யா நடித்துள்ள '24' படத்தை இயக்கியுள்ள விக்ரம்குமார், இதற்கு முன்னர் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா...

இராமாயணத்துடன் கனெக்ஷன் ஆன விக்ரம்-நயன்தாரா படம்.

'10 எண்றதுக்குள்ள' படத்தை அடுத்து 'அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும், ...

இசைஞானியின் கருத்தை ஆதரித்த ஆஸ்கார் நாயகன்

சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் 'நூற்றாண்டு விருதை பெற்ற இசைஞானி இளையராஜா...