அஜித், நயன்தாராவுக்கு நன்றி கூறிய இயக்குனர் சிவா!

  • IndiaGlitz, [Friday,April 19 2019]

தல அஜித், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' திரைப்படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.

இதனையடுத்து இயக்குனர் சிவா தனது சமூக வலைத்தளத்தில், அஜித், நயன்தாரா உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 'தல அஜித், தல அஜித் ரசிகர்கள், நயன்தாரா, ஜகபதிபாபு, மற்றும் விஸ்வாசம் படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், மீடியா நண்பர்கள், சினிமா விரும்பிகள் குறிப்பாக ஃபேமிலி ஆடியன்ஸ்கள், சத்யஜோதி பிலிம்ஸ், எனது டீம் மற்றும் இந்த படத்தை பார்த்த அனைவருக்கும் நன்றி. இந்த படத்தை வெற்றிப்படமாக்க அருள்புரிந்த கடவுளுக்கும் நன்றி என இயக்குனர் சிவா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இயக்குனர் சிவாவின் இந்த டுவீட்டுக்கு அஜித் ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.