அஜித் ஃபர்ஸ்ட்லுக் கிராபிக்ஸா? சிறுத்தை சிவா விளக்கம்

  • IndiaGlitz, [Friday,February 03 2017]

அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று அதிகாலை வெளிவந்து அஜித் ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த பர்ஸ்ட்லுக்கை ஒருசிலர் அஜித்தின் உடற்கட்டு முழுக்க முழுக்க கிராபிக்ஸ் என்றும் ஹாலிவுட் நடிகரின் உடலில் தல'யின் தலை ஒட்டப்பட்டிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்தனர்.

இந்நிலையில் இயக்குனர் சிறுத்தை சிவா பேட்டி ஒன்றில் இதை தெளிவுபடுத்தியுள்ளார். சத்தியமாக இது கிராபிக்ஸ் இல்லை. இதற்கு மேல் நான் எந்த வார்த்தையை பயன்படுத்துவது என்பது எனக்கு தெரியவில்லை. இந்த காட்சியை நான் அஜித்திடம் கூறி அதற்கேற்ப உடற்கட்டை கொண்டு வரவேண்டும் என்று நான் சொன்னவுடன் அஜித் உடனே ஒப்புக்கொண்டார். தினமும் நான்கு மணி நேரம் ஜிம்முக்கு சென்று இந்த உடற்கட்டை கொண்டு வந்தார். அதுமட்டுமின்றி இந்த காட்சிகள் படமாக்கும்போது அதிக சிரத்தை எடுத்து நடித்தார். இந்த உண்மை படம் பார்க்கும்போது அனைவருக்கும் புரியும்' என்று கூறினார்.

இயக்குனர் சிவாவின் இந்த விளக்கத்தை அடுத்து அஜித்தின் உடற்கட்டு குறித்த சந்தேகம் இனி யாருக்கும் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

எண்ணூர் அருகே மோதிய கப்பல்கள் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை அருகே உள்ள எண்ணூரில் கடந்த வாரம் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதிய விபத்தில் ஒரு கப்பலில் இருந்து கச்சா எண்ணெய் டன் கணக்கில் கடல்நீருடன் கலந்தது

தயாரிப்பாளர் சங்க தேர்தல். தலைவர் பதவிக்கு விஷாலை முன்மொழிந்த கமல்

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த விஷாலை, சங்கத்தின் நிர்வாகிகள் இன்று காலை சஸ்பெண்டை ரத்து செய்த செய்தியையும், அதனையடுத்து விஷால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் செய்தியையும் சற்று முன்னர் பார்த்தோம்

அஜித்தின் 'விவேகம்' டீசர் ரிலீஸ் எப்போது?

அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று அதிகாலை வெளிவந்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏறபடுத்திவிட்டது

தன்னிகரில்லா தமிழக முதல்வர் பெயரில் விஜய் ஆண்டனியின் அடுத்த படம்

திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரான அறிஞர் அண்ணாவின் 48வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சஸ்பெண்ட் ரத்தை அடுத்து விஷால் எடுத்த அதிரடி முடிவு

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடிகர் விஷாலை இன்றுக்குள் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து தயாரிப்பாளர் சங்கம் விஷாலின் சஸ்பெண்டை ரத்து செய்தது என்பதை சற்று முன் பார்த்தோம்.