சிலை வைப்பது அஜித்துக்கு பிடிக்குமா? இயக்குனர் சிவா பதில்

  • IndiaGlitz, [Thursday,August 03 2017]

தல அஜித்துக்கு தமிழகத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருப்பதும், அஜித் பெயரில் அன்னதானம், சமூக சேவைகள் ஆகியவைகளை அவர்கள் செய்து கொண்டிருப்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நெல்லையில் நூலகத்துடன் கூடிய அஜித்தின் வெண்கல சிலை, கும்பகோணத்தில் அஜித்தின் சிலை ஆகியவை குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அஜித்துக்கு சிலை வைப்பது அவருக்கு தெரியுமா, அதை அவர் விரும்புவாரா? என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அஜித்தின் மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் சிவா கருத்து கூறியுள்ளார்.

சிலை வைப்பது அஜித்துக்கு சுத்தமாக பிடிக்காது. அவர் இதை விரும்பவே மாட்டார். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ரசிகர்களாக இருக்கட்டும், படம் பார்க்க வருபவர்களாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் அஜித் சொல்வது ஒன்றே ஒன்று தான். அம்மா, அப்பா, செய்யும் தொழில் அது தான் முக்கியம். அது போக தான் மற்ற அனைத்தும் என்று அவர் அடிக்கடி கூறுவார். தன்னுடைய படங்கள் மட்டுமின்றி நல்ல படங்கள் யாருடையதாக இருந்தாலும், திரையரங்கில் போய் பார்த்து சந்தோஷமடைந்து, அதிலிருக்கும் நல்ல விஷயங்களை தங்களுடைய வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என்பது மட்டுமே அஜித்தின் அறிவுரையாக இருக்கும். இந்த மாதிரி சிலை வைப்பதில் அவருக்கு கண்டிப்பாக உடன்பாடு இருக்காது என்று கூறினார்.

More News

இரவோடு இரவாக மெரினாவில் இருந்த சிவாஜி சிலை அகற்றம்

சென்னை மெரீனாவில் இருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை நேற்று நள்ளிரவில் அகற்றப்பட்டது.

ஃபைனான்சியர் போத்ராவின் பகல் கொள்ளை ஃபார்முலா

சமீபத்தில் கைதான சினிமா ஃபைனான்சியர் போத்ரா குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதும் இதுவரை அவரால் பாதிக்கப்பட்ட பல சினிமா பிரபலங்கள் தற்போது தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை வெளியே கூற துணிந்துள்ளனர்...

'விவேகம்' படத்தை பாராட்டிய விக்னேஷ்சிவன்

'நானும் ரெளடி தான்' படத்தின் வெற்றியால் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இடம்பெற்ற விக்னேஷ் சிவன் தற்போது சூர்யா, கீர்த்திசுரேஷ் நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை இயக்கி வருகிறார்...

கமல் படத்தை ஏன் இயக்கவில்லை? பி.வாசு விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பணக்காரன்', 'மன்னன்', 'உழைப்பாளி', 'சந்திரமுகி போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் பி.வாசு...

சந்தானம் நடித்த 'சர்வர் சுந்தரம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

நகைச்சுவை நடிகரில் இருந்து ஹீரோவாக பதவியுயர்வு பெற்ற நடிகர் சந்தானம், இனிமே இப்படித்தான், வல்ல்வனுக்கும் புல்லும் ஆயுதம் போன்ற வெற்றி படங்களை கொடுத்த நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடித்த அடுத்த படமான 'சர்வர் சுந்தரம்' படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.