ரூ.125 கோடி வசூல் உண்மையா? இயக்குனர் சிவாவின் மெச்சூரிட்டியான விளக்கம்
- IndiaGlitz, [Saturday,January 19 2019]
தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி வசூல் செய்ததாக அந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த தகவல் உண்மை என்றும் பொய்யான தகவல் என்றும் நெட்டிசன்கள் விவாதம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் 'விஸ்வாசம்' இயக்குனர் சிவா சமீபத்தில் படத்தின் வசூல் குறித்து பேட்டி ஒன்றில் கூறியபோது, 'ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு டெக்னீஷியன் வியாபாரத்தின் விபரத்திற்குள் போய்விட்டால் அவருடைய கிரியேட்டிவிட்டி பாதிக்கப்படும், அதேபோல் ரசிகர்களும் வியாபாரத்தின் விபரத்திற்குள் போய்விட்டால் அவர்களுடைய ரசிப்புத்தன்மை பாதிக்கப்படும். அந்த இடத்திற்கு போகக்கூடாது என்பதே எனது எண்ணம்.
என்னை பொருத்தவரையில் ஒரு கதையை எழுதுகிறோம். அந்த கதைக்காக உண்மையான கடினமான உழைப்பை தருகிறோம். அது வெற்றி பெரும்போது ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதோடு அடுத்த கதைக்கு போய்விடுவேன். இதுதான் ஒரு கிரியேட்டராக என்னை சரியாக கொண்டு செல்லும் என்று நான் நினைக்கின்றேன். ரசிகர்களும் ஒரு திரைப்படத்தை பார்த்து அதை கொண்டாடினால் அதுதான் மிகப்பெரிய ரசிப்புத்தன்மை. எந்த படம் எவ்வளவு வசூல் செய்தது என்ற விபரங்கள் யாருக்கும் தேவையில்லை. அது முதலீடு செய்தவர்களுக்கும் அதை வியாபாரம் செய்தவர்களுக்கும் மட்டும் தெரிந்தால் போதும்' என்று கூறியுள்ளார்.
இயக்குனர் சிவாவின் இந்த மெச்சூரிட்டியான விளக்கத்திற்கு பின்னராவது ரசிகர்கள் வசூல் தகவல்கள் குறித்த மோதல் போக்கினை கைவிட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. பொய்யான டிராக்கர்களின் கருத்தை நம்பி தேவையில்லாத விவாதம் வேண்டாம் என்பதே சிவாவின் இந்த பேட்டியில் இருந்து அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை ஆகும்.