டீசர், டிரைலருக்கு முன் இன்னொரு ஃபர்ஸ்ட்லுக். 'விவேகம்' இயக்குனர் சிவா

  • IndiaGlitz, [Tuesday,February 21 2017]

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஒருசில நாட்களில் மீண்டும் பல்கேரியா செல்லவுள்ள 'விவேகம்' படக்குழு அத்துடன் படப்பிடிப்பை முடிக்க உள்ளது.
இந்நிலையில் 'விவேகம்' பட இயக்குனர் சிவா 'கொங்கு பொறியியல் கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு விவேகம் குறித்த ஒருசில தகவல்களை கூறியுள்ளார். 'அனைத்து தரப்பினர்களையும் திருப்தி செய்யும் வகையில் உள்ள ஒரு ஆக்சன் படம்தான் விவேகம். பெரிய பட்ஜெட் படமான இந்த படத்தின் திரைக்கதைக்காக நான் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளேன். இந்த படத்தில் அஜித்தின் இன்னொரு புதிய லுக் உள்ளது. இந்த லுக், இந்த படத்தின் டீசர் மற்றும் டிரைலருக்கு முன்பு வெளிவரும். இந்த படத்திற்காக இன்னும் ஒருசில பல்கேரிய காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது' என்று கூறினார்.
அஜித்தின் ஃபர்ஸ்ட்லுக் கிராபிக்ஸ் என்று கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கூறிய இயக்குனர் சிவா, 'இது கண்டிப்பாக கிராபிக்ஸ் இல்லை, அஜித் அவர்களின் கடின உழைப்பு என்பதை படம் வெளிவரும் போது அனைவரும் புரிந்து கொள்வீர்கள்' என்று பதிலளித்தார். அஜித் எப்போதுமே 'எண்ணம் போல் வாழ்க்கை' என்பதை கூறுவார். அதை அவர் முழுமையாக நம்புபவரும் கூட' என்று அஜித்தை பற்றி அவர் கூறியுள்ளார்.

More News

இயல்பு நிலைக்கு விரைவில் திரும்புகிறார் பாவனா.

கடந்த வாரம் பாலியல் தொல்லைக்கு ஆளாகிய நடிகை பாவனா, அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீண்டிருக்க மாட்டார் என்றே பலரும் நினைத்த நிலையில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக அவர் தயாராகிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

103 வயது பழம்பெரும் இயக்குனர் மித்ரதாஸ் காலமானார்

பி.யூ.சின்னப்பா நடித்த 'தயாளன்', எம்.கே.தியாகராஜபாகவதர் நடித்த 'சிவகாமி' உள்பட பல படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் மித்ரதாஸ் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 103

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா?

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ஹாகர சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என சிறை அதிகாரிகளிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

நம்பிக்கை வாகெடுப்பு குறித்த ஸ்டாலின் வழக்கு. நாளை விசாரணை

கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை கோரியது. இந்த வாக்கெடுப்பில் அமளி ஏற்பட்டதால் திமுக உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பின்னர் வாக்கெடுப்பு நடந்தது....

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தென்னிந்திய திரையுலகையே சமீபத்தில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் என்றால் அது பிரபல நடிகை பாவனாவை மர்ம நபர்கள் கடத்தி அத்துமீறிய சம்பவம்தான். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குற்றவாளிகளை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்க கோரியும் மலையாள திரையுலகம் மட்டுமின்றி தமிழ் திரையுலகமும் கேரள அரசுக்கு கோரிக்கை விட