அஜித்துக்கு திடீரென நன்றி கூறிய சிறுத்தை சிவா: காரணம் இதுதான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த வீரம், விவேகம் மற்றும் விஸ்வாசம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா திடீரென சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித்துக்கு நன்றி தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இன்று ஜனவரி 10ஆம் தேதி அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ’வீரம்’ மற்றும் ’விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆன தேதி என்பதும் இந்த இரண்டு படங்களும் நல்ல வெற்றியை பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிறுத்தை சிவா தனது டுவிட்டரில், ‘இன்று ஜனவரி 10ஆம் தேதி தான் வீரம் மற்றும் ’விஸ்வாசம்’ ஆகிய திரைப்படங்கள் வெளியான நாள் என்பதும், இந்த படங்கள் எனக்கு மிகப் பெரிய சந்தோசத்தை கொடுத்தது என்றும், எனக்கு மட்டுமின்றி என்னுடைய படக்குழுவினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியான நாள் இது என்றும், எனவே அஜித் அவர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும், மீடியா நண்பர்களுக்கும், சினிமா ரசிகர்களுக்கும் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார்.
Sai sai ???? jan 10 veeram and viswasam movies which gave me happiness &came as great blessings to me &my team and their families??thank u Ajith sir????Ajith sir fans?? media friends??cinema lovers?? and family audience??Vijaya production??sathyajothi films??all the cast&crew ??
— siva+director (@directorsiva) January 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments