''தரலோக்கல்'' கேரக்டருக்காக இறங்கி அடித்துள்ளார் அஜீத்: சிறுத்தை சிவா
Send us your feedback to audioarticles@vaarta.com
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்று பிரபல தொலைக்காட்சி ஒன்றில் 'வேதாளம்' சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், இயக்குனர் சிறுத்தை சிவா, பாடலாசிரியர் மதன்கார்க்கி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் கூறியதன் சில பகுதிகளை பார்ப்போம்.
இயக்குனர் சிவா: வேதாளம் படத்தின் கதையை அஜீத் சார் அவர்களை மனதில் வைத்துதான் எழுதினேன். இந்த படத்தில் அவருடைய பாடி லாங்குவேஜ், மேனரிசம் ஆகியவற்றை முழு அளவில் அவருடைய ரசிகர்கள் பார்த்து மகிழலாம். இந்த படம் முழுக்க முழுக்க ஒரு பக்கா எண்டர்டெயின்மெண்ட் படம், அனைத்து வயதினர்களும் ரசிக்கும்படியான ஒரு படம் இருக்கும் என்று உறுதி தருகிறேன். இந்த படத்தில் பிளாஷ்பேக்கில் வரும் 'வேதாளம்' என்ற கேரக்டர் ஒரு தரலோக்கல் கேரக்டர். இந்த கேரக்டருக்காக அஜீத், இறங்கி அடித்துள்ளார்'
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம்: 'வேதாளம்' படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யத்தான் தான் முடிவு செய்திருந்தேன். ஆனால் அஜீத் இந்த படம் தீபாவளுக்கு வரவேண்டும் என்று விரும்பினார். அதற்காக அவர் இரவுபகலாக பணிபுரியவும் ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த முழு ஒத்துழைப்பால்தான் இந்த படம் தீபாவளி ரிலீஸ் ஆவது சாத்தியமாகியுள்ளது.
மதன் கார்க்கி: என்னுடைய நண்பர்கள் பலர் ஏன் இன்னும் அஜீத் சார் படத்திற்கு பாட்டு எழுதவில்லை என்று கேட்டுக்கொண்டே இருந்தார்கள். எனக்கும் அந்த குறை மனதில் இருந்து கொண்டே இருந்தது. இந்த படத்திற்கு பாட்டு எழுதியதன் மூலம் அந்த குறை நீங்கிவிட்டது என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com