'பலூன்' இயக்குனர் சினிஷ் கலாய்த்தது யாரை தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,December 17 2017]

இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள திகில் படம் 'பலூன்' வரும் 29ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது.

இந்த சந்திப்பில் இயக்குனர் சினிஷ் பேசியபோது, 'ஒரு தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டதன் பேரில் 20 நாட்களில் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் தான் இந்த 'பலூன்'. இந்த படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதுதற்கு முன்னர் சில ஆங்கில படங்களை பார்த்து அதில் இருந்து சில காட்சிகளை எடுத்து நானும் கொஞ்சம் யோசித்து எழுதியதுதான் இந்த ஸ்கிரிப்ட். இதை ஏன் நான் சொல்கிறேன் என்றால் ஆடியன்ஸ் இப்போதெல்லாம் ரொம்ப ஸ்மார்ட். படம் பார்த்து முடித்தவுடனே இது எந்த படத்தில் இருந்து சுட்ட காட்சி என்பதை வட்டம் போட்டு காட்டி விடுகின்றனர். 'மெளனராகம்' மாதிரி ஒரு படத்தை இயக்கிவிட்டு நான் 'மெளனராகம்' படமே பார்க்கவில்லை என்றெல்லாம் கூறி இனி யாரும் தப்பிக்க முடியாது' என்று கூறினார்

மேலும் 'நான் எந்தெந்த படத்தில் இருந்து காட்சிகளை சுட்டேனோ, அந்த படங்களுக்கு நன்றி கூறும் வகையில் டைட்டிலில் போட்டுவிடுவேன்' என்றும் இயக்குனர் சினிஷ் கூறியுள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியான ஒரு படம் 'மெளன ராகம்' படத்தை காப்பியடித்து எடுத்தது என்று விமர்சனங்கள் வந்த நிலையில், அந்த படத்தின் இயக்குனரைத்தான் சினிஷ் கலாய்த்துள்ளதாக கோலிவுட்டில் கூறப்படுகிறது. அந்த 'மெளனராகம்' காப்பி இயக்குனர் யார்? என்பதை கண்டுபிடித்து கமெண்ட் பாக்ஸில் எழுதுங்கள்

 

More News

அடுத்த ஆண்டு நானும் ஒரு இயக்குனர்: அரவிந்தசாமி

'தளபதி' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்து வைத்த நடிகர் அரவிந்தசாமி மிக குறுகிய காலத்தில் தொடர்ச்சியாக வெற்றிப்படங்கள் கொடுத்து முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்தார்

'சக்க போடு போடு ராஜா' சென்சார் மற்றும் ரன்னிங் டைம்

சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள 'சக்க போடு போடு ராஜா' திரைப்படம் வரும் 22ஆம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளிவரவுள்ளது. இந்த படத்தின் மூலம் சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாவதால்

4 வயது சிறுமிக்காக பென்சில் நிறுவனம் எடுத்த நெகிழ வைக்கும் புதிய முயற்சி

பொதுவாக இடதுகை பழக்கம் உள்ளவர்களால் வலதுகை பழக்கம் உள்ளவர்கள் போல் எளிமையாக அனைத்து செயல்களையும் செய்ய முடியாது.

மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் விஜய்-முருகதாஸ் படக்குழு?

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ள 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டில் 'கலப்பை' என்ற ஒரு வதந்தி பரவி வந்தன

நான்கு பேர்களை மட்டும் ஃபாலோ செய்யும் யோகிபாபு

கோலிவுட் திரையுலகில் பிசியான காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. குறிப்பாக விஜய்யின் 'மெர்சல்' படத்தில் நடித்ததை அடுத்து 'விஜய் 62' படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்