விஜய்-சூர்யா இணைந்து நடித்த படத்தின் இயக்குனருக்கு மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி..!

  • IndiaGlitz, [Tuesday,August 08 2023]

விஜய், சூர்யா இணைந்து நடித்த சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய இயக்குனருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

பிரபல மலையாள இயக்குனர் சித்திக், தமிழில் விஜய் - சூர்யா நடித்த ’பிரண்ட்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கினார் என்பதும் இந்த படம் சூப்பர் ஹிட் என்பதும் தெரிந்ததே.

இதையடுத்து விஜயகாந்த் ’நடித்த ’எங்கள் அண்ணா’ பிரசன்னா, அப்பாஸ் நடித்த ’சாது மிரண்டால்’ விஜய் நடித்த ’காவலன்’ மற்றும் அரவிந்த்சாமி நடித்த ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய தமிழ் படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் ஏராளமான மலையாள படங்களையும் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் சித்திக் அவர்களுக்கு திடீரென திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவருக்கு எக்மோ கருவி துணையுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

More News

அஜித் மாமனார் இவ்வளவு அழகாக பாடுவாரா? வைரல் வீடியோ..!

நடிகர் அஜித்தின் மாமனார் அதாவது ஷாலினி அஜித்தின் தந்தை ஒரு சிறந்த பாடகர் என்பதும் குறிப்பாக டிஎம் சௌந்தரராஜன் பாடிய பாடலை அவரை போலவே பாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இதுல யார் அம்மா? யார் மகள்? மகள்களுடன் குஷ்புவின் க்யூட் புகைப்படங்கள்..!

நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள்களுடன் இருக்கும் க்யூட் புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் இதில் யார் அம்மா? யார் மகள்? என ரசிகர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்..

ஒரே படத்தில் தனுஷ், ஜிவி பிரகாஷ், ஹிப் ஹாப் தமிழா ஆதி, யுவன் ஷங்கர் ராஜா.. ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட வீடியோ..!

ஒரே திரைப்படத்தில் தனுஷ், ஜிவி பிரகாஷ், ஹிப்ஹாப் தமிழா ஆதி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலர் பணி புரிந்துள்ளதாக ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரகுமான் வெளியிட்டுள்ள வீடியோவில் இருந்து தெரியவந்துள்ளது.

வில்லனாக நடித்தாலும் ஹீரோ.. பகத் பாசிலை கொண்டாடும் ரசிகர்கள்..! பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

பிரபல மலையாள இயக்குனரும் தமிழில் 'காதலுக்கு மரியாதை' 'வருஷம் 16'  உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஃபாசில் மகன் தான் நடிப்பு அரக்கன் என்று போற்றப்படும் பகத் ஃபாசில்.

முதல் முறையாக இணையும் அனிருத்-யுவன்ஷங்கர் ராஜா.. செம்ம வீடியோ வைரல்..!

இன்றைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்கள் ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றி வருவதை பலமுறை பார்த்து வருகிறோம். ஒரு இசையமைப்பாளர் கம்போஸ் செய்த பாடலில் இன்னொரு இசையமைப்பாளர் பாடி