காஸ்ட்யூம் அடிமைகள்: ஐஸ்வர்யா ராயை விமர்சித்தாரா பிரபல இயக்குனர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய புகைப்படம் ஒன்றை பதிவு செய்து ’காஸ்டியூம் அடிமைகள்’ என்று பிரபல இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் அதில் ஐஸ்வர்யா ராய் உள்பட இந்திய திரை உலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு சிவப்பு கம்பள விரிப்பில் விதவிதமான காஸ்டியூமில் கலக்கி வருகின்றனர் என்பது தெரிந்ததே.
நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த விழாவில் தொடர்ச்சியாக 20 வது ஆண்டுகளாக கலந்து கொள்கிறார் என்பதும் இந்த ஆண்டு அவருடைய மகளும் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் வித்தியாசமாக அலுமினியம் மற்றும் கிரிஸ்டலில் உருவான நீளமான ஆடை ஒன்றை அணிந்து ரெட் கார்பெட்டில் நடந்து வந்த போது அவருடைய ஆண் உதவியாளர் அவருடைய நீளமான ஆடைகளை தரையில் படாதவாறு பிடித்திருந்தார். இந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த ’காஷ்மீர் பைல்ஸ்’ என்ற படத்தில் இயக்குனர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி கோபமாக பதிவு செய்துள்ளார்.
காஸ்டியூம் அடிமைகள் என்ற வார்த்தையை கேள்வி பட்டு உள்ளீர்களா? அவர்கள் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் இந்த புகைப்படத்தில் ஒரு ஆண் காஸ்ட்யூம் அடிமையாக இருக்கிறார். இந்தியாவில் பெண் பிரபலங்களிடம் மட்டும் தான் இதையெல்லாம் பார்க்க முடியும். இப்படிப்பட்ட சங்கடமான பேஷனுக்கு நாம் ஏன் முட்டாளாக மாறுகிறோம் என்பது தெரியவில்லை.
எனது இந்த கருத்துக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் எந்த தொடர்பும் இல்லை, இது காஸ்ட்யூம் அடிமைகள் பற்றிய கருத்து. ஐஸ்வர்யா ராய் ஒரு மாடல் மற்றும் ஃபேஷன் தூதுவர் மட்டுமே என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Have you guys heard of a term called ‘Costume Slaves’. They are mostly girls (a suited man in this case). You can see them now in India too with almost every female celeb. Why are we becoming so stupid and oppressive just for such uncomfortable fashion? pic.twitter.com/bWYavPYjvS
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) May 19, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments