சிவகார்த்திகேயனின் 'ரெமோ'வில் இணைந்த ஷங்கர்

  • IndiaGlitz, [Tuesday,June 21 2016]

சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள 'ரெமோ' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் மேக்கிங் வீடியோ நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் வரும் 23ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் பாடலான 'ரெமோ நீ காதலன்' ரிலீஸ் ஆகவுள்ளதாகவும், வரும் ஜூலை 1ஆம் தேதி சிங்கப்பூரில் SIIMA விருது வழங்கும் விழாவில் 'செஞ்சிட்டாளே' சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 23ஆம் தேதி ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் பாடலை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் வெளியிடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஷங்கரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இதுவரை நடிக்கவில்லை என்றாலும் அவர் நடித்த படத்தின் பாடலை ஷங்கர் வெளியிடுவதே அவருக்கு மிகப்பெரிய பெருமையாக அமையும் என்று நம்பப்படுகிறது.