சட்ட நடவடிக்கை எடுப்பேன்: இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை.. என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
சு. வெங்கடேசன் அவர்களின் புகழ்பெற்ற தமிழ் நாவல் "நவ யுக நாயகன் வேல் பாரி"யின் பதிப்புரிமை வைத்திருப்பவராக, இந்த நாவலின் முக்கிய காட்சிகள் அனுமதியின்றி பல படங்களில் பயன்படுத்தப்படுவதை பார்த்து மிகுந்த வருத்தம் அடைகிறேன்.
சமீபத்திய திரைப்படத்தின் டிரெய்லரிலிருந்து, நாவலின் முக்கியமான காட்சிகள் திருடப்பட்டு பயன்படுத்தப்படுவதை பார்த்து மிகவும் வேதனையாக உள்ளது. தயவுசெய்து, இந்த நாவலின் காட்சிகளை திரைப்படங்கள், வெப் சீரிஸ் மற்றும் எந்தவொரு ஊடகத்திலும் பயன்படுத்த வேண்டாம். படைப்பாளிகளின் உரிமைகளை மதியுங்கள்! அனுமதியின்றி காட்சிகளை தழுவி எடுக்க வேண்டாம், மீறினால் சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டி வரலாம்! இவ்வாறு இயக்குனர் ஷங்கர் பதிவு செய்துள்ளார்.
இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜா நடித்து வரும் ’கேம் சேஞ்சர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில் அடுத்ததாக அவர் ’வேல் பாரி’ நாவலை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்க இருப்பதாக கூறப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தற்போது இந்த எச்சரிக்கையை அவர் வெளியிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
Attention to all ! As the copyright holder of Su. Venkatesan's iconic Tamil novel "Nava Yuga Nayagan Vel Paari", I'm disturbed to see key scenes being ripped off & used without permission in many movies. Really upset to see important key scene from the novel in a recent movie…
— Shankar Shanmugham (@shankarshanmugh) September 22, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments