தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள்: இயக்குனர் ஷங்கர் கோரிக்கை
- IndiaGlitz, [Monday,July 03 2017]
தமிழ் திரையுலகம் கடந்த சில வருடங்களாகத்தான் லாபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. தயாரிப்பாளர்கள் ரூ.100 கோடிக்கும் மேல் செலவு செய்து பெரிய பட்ஜெட் படங்களை துணிச்சலுடன் தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் சின்ன பட்ஜெட் படங்களும் வலுவான திரைக்கதையால் வெற்றி பெற்று ஆச்சரியமூட்டும் வசூலை பெற்று வந்தது.
இந்த நிலையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை, திடீரென தமிழ்த்திரையுலகிற்கு ஜிஎஸ்டி வடிவில் சோதனை ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி 28%, தமிழக அரசின் கேளிக்கை வரி 30% மற்றும் இதர வரிகள் 6% என்று 64% வரிகள் கட்டினால் 100 நாட்கள் ஓடினாலும் லாபம் பார்க்க முடியாத நிலை உள்ளது.
இதனால் கேளிக்கை வரி மற்றும் ஜிஎஸ்டி வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரையுலகினர், திரையரங்கு அதிபர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் 48% முதல் 58% வரி என்பது மிக மிக அதிகம், தமிழ் சினிமாவை காப்பாற்றுங்கள் என்று தனது சமூக வலைத்தளத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.