விஜய்சேதுபதியின் நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது: வைரலாகும் ஷங்கர் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது என பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாமனிதன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்புகாட்சி நேற்று திரையிடப்பட்ட நிலையில் இந்தப் படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பார்த்தார்.
இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து பார்த்த இயக்குனர் ஷங்கர் அதன்பிறகு தனது சமூக வலைத்தளத்தில், ‘விஜய் சேதுபதி, சீனுராமசாமி உள்பட படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை ’மாமனிதன்’ படம் கொடுத்துள்ளதாகவும் இயக்குனர் சீனு ராமசாமி தனது இதயத்தையும் ஆன்மாவையும் வைத்து யதார்த்தமான படத்தை கொடுத்துள்ளார் என்றும் கூறினார்.
மேலும் விஜய் சேதுபதியின் அற்புதமான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது என்றும், இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் கதையுடன் ஆத்மார்த்தமாக இணைந்துள்ளது என்றும் பதிவு செய்துள்ளார்.
ஷங்கரின் கணிப்பின்படி இந்த படத்திற்காக விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
#Maamanithan Got the satisfaction of watching a good film,Dir @seenuramasamy put his heart &soul and made this a realistic classic?? @VijaySethuOffl ‘s brilliant performance deserves a national award.Music from Maestro @ilaiyaraaja & @thisisysr blended soulfully with the film.
— Shankar Shanmugham (@shankarshanmugh) June 23, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments