விஜய்சேதுபதியின் நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது: வைரலாகும் ஷங்கர் டுவிட்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது என பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’மாமனிதன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்புகாட்சி நேற்று திரையிடப்பட்ட நிலையில் இந்தப் படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பார்த்தார்.

இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து பார்த்த இயக்குனர் ஷங்கர் அதன்பிறகு தனது சமூக வலைத்தளத்தில், ‘விஜய் சேதுபதி, சீனுராமசாமி உள்பட படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார். ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தியை ’மாமனிதன்’ படம் கொடுத்துள்ளதாகவும் இயக்குனர் சீனு ராமசாமி தனது இதயத்தையும் ஆன்மாவையும் வைத்து யதார்த்தமான படத்தை கொடுத்துள்ளார் என்றும் கூறினார்.

மேலும் விஜய் சேதுபதியின் அற்புதமான நடிப்பு தேசிய விருதுக்கு தகுதியானது என்றும், இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் கதையுடன் ஆத்மார்த்தமாக இணைந்துள்ளது என்றும் பதிவு செய்துள்ளார்.

ஷங்கரின் கணிப்பின்படி இந்த படத்திற்காக விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

விஷால்-கார்த்தி பட இயக்குனருக்கு திருமணம்: நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்!

விஷால், கார்த்தி பட இயக்குனருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவருடைய நிச்சயதார்த்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. 

'தேவர் மகன் 2' படத்தில் கமலுடன் மீண்டும் இணையும் 'விக்ரம்' நடிகர்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள 'தேவர் மகன் 2' படத்தில் கமல்ஹாசனின் மகனாக 'விக்ரம்' படத்தில் நடித்த பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

'ஹாரிபாட்டர்' படத்தில் இடம்பெறும் ரயிலில் பிரியங்கா மோகன்: வைரல் வீடியோ

பிரபல ஹாலிவுட் திரைப்படமான 'ஹாரிபாட்டர்' படத்தில் இடம்பெற்ற ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை நடிகை பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ள

ராகவா லாரன்ஸ் நடித்த 'ருத்ரன்' பர்ஸ்ட்லுக்: ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் 'ருத்ரன்' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்தின் செம போஸ்டர்: இணையத்தில் வைரல்

விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் திரைப்படம் 'கோப்ரா'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி உலகம்