தென்னாப்பிரிக்கா படப்பிடிப்பில் கமலுக்கு நன்றி கூறிய ஷங்கர்.. ஏன் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது என்றும், அங்கு ரயில் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்க படப்பிடிப்பில் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கமல்ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, கமல்ஹாசன் அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் மீண்டும் மே மாதம் அடுத்த கட்ட படப்பிடிப்பில் சந்திக்கலாம் என்றும் தெரிவித்தார்.
’இந்தியன் 2’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு கிளைமாக்ஸ் தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே மே மாதம் இந்த படத்தின் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத்தி சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்த ‘இந்தியன் 2’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரத்னவேலு, ரவிவர்மன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you for this power-packed Schedule @ikamalhaasan sir 🔥 See you again in May! Will be moving from #Indian2Gamechanger for the climax!!! pic.twitter.com/J7WGmzCuxb
— Shankar Shanmugham (@shankarshanmugh) April 18, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments