ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதா? அவரே அளித்த விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த ’எந்திரன்’ படத்தின் கதை விவகாரம் குறித்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் கடந்த 11 ஆண்டுகளாக இயக்குனர் ஷங்கர் நேரில் ஆஜராக வில்லை என்ற புகாரின் அடிப்படையில் சமீபத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதாக ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு நிலையில் இது குறித்து ஷங்கர் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
எழும்பூர் நீதிமன்றம் எனக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்திருப்பதாக ஒரு பொய்யான செய்தியைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். எனது வழக்கறிஞர் திரு.சாய் குமரன், நீதமன்றத்தை இன்று அணுகி இந்தச் செய்தி குறித்து அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றார். எனக்கெதிராக அப்படி எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை உடனடியாக மாண்புமிகு நீதிபதி உறுதி செய்தார்.
இணையத்தில் தினசரி நீதிமன்ற வழக்குகளின் நிகழ்வுகள் பதிவேற்றுதலில் நடந்த தவறு காரணமாக இப்படி ஒரு விஷயம் நடந்துள்ளது. அது தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாமல் இப்படி ஒரு பொய்யான செய்தி உலவுவதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கறது. 'இந்த விஷயம் எனது குடும்பத்துக்கும், நல விரும்பிகளுக்கும் தேவையில்லாத மன உளைச்சலைத் தந்துள்ளது.
இது போன்ற பொய்யான செய்திகள் இனி பரவாது என்பதை உறுதி செய்ய, எனது இந்த அறிக்கையை அனைத்து ஊடகங்களும் பகிரவேண்டும் என்று தயவுகூர்ந்து அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..
இவ்வாறு ஷங்கர் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments