'விக்ரம்' படம் பார்த்து ஷங்கர் என்ன சொன்னார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் இருந்து வெளியான ‘கேஜிஎப் 2’ மற்றும் ’ஆர்.ஆர்.ஆர்’ ஆகிய திரைப்படங்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் தமிழ் படம் ஒன்று மாபெரும் வெற்றி பெற வேண்டும் என தமிழ் ரசிகர்கள் மிகவும் ஏக்கத்துடன் காத்திருந்தனர். அந்த ஏக்கத்தைப் போக்கி வைத்த படமாக கமல்ஹாசன் ’விக்ரம்’ படம் உள்ளது.
கடந்த வெள்ளியன்று வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை செய்து வருகிறது. இதனை அடுத்து கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், அனிருத், அன்பறிவ் உள்பட படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட இந்த படத்தை பார்த்து பாராட்டிய திரையுலகினர்களே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், ’விக்ரம்’ படம் பார்த்து தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
’விக்ரம்’ திரைப்படம் ஒரு வாவ். கமலஹாசன் அவர்களை பெரிய திரையில் மீண்டும் 360 டிகிரியில் பார்ப்பதற்கு அழகாக உள்ளது. அவர் ஒரு உண்மையான லெஜெண்ட். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஸ்டைல் மிகவும் அற்புதமாக உள்ளது. இண்டர்வெல் காட்சி அபாரமாக உள்ளது. அனிருத் ஒரு ரியல் ராக்ஸ்டார் என்பதை மீண்டும் உறுதி செய்துவிட்டார். அன்பறிவ் இந்த படத்தை முழுவதுமாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்’ என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ’இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
#vikram Wow??????great to see @ikamalhaasan sir on bigscreen firing 360° ??????like a true LEGEND??.TREMENDOUS effort n style from @Dir_Lokesh ??????engaging,highs in regular intervals @anirudhofficial THE REAL ROCKSTAR??❤️@anbariv - masters????Kudos to the actors&whole team ????
— Shankar Shanmugham (@shankarshanmugh) June 7, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com