வெங்கட்பிரபுவின் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து கூறிய பிரமாண்ட இயக்குனர்
Send us your feedback to audioarticles@vaarta.com
வெங்கட்பிரபு இயக்கிய முதல் திரைப்படமான 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகம் 'சென்னை 600028 II' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது. பெரும்பாலான ஊடகங்கள் இந்த படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளன.
இந்நிலையில் இந்தியாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவராகிய ஷங்கர், வெங்கட்பிரபுவின் டீமுக்கு தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை 28 அணியை 'சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு' இணையாக ஒப்பிட்டுள்ள ஷங்கர், நகைச்சுவையுடன் கூடிய நல்ல பொழுதுபோக்கு படம் என்று வாழ்த்தியுள்ளார்.
நகைச்சுவையுடன் கூடிய திரைக்கதை, யுவன்ஷங்கர் ராஜாவின் அசத்தலான பின்னணி இசை, படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர்களின் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய நடிப்பு ஆகியவையே இந்த படத்தின் வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது. 'மங்காத்தா' படத்திற்கு பின்னர் வெங்கட்பிரபுவின் இயக்கத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இந்த படம் கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments