மகளுடன் ரஜினியை சந்தித்த இயக்குனர் ஷங்கர்: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை இயக்குனர் ஷங்கர் தனது மகளுடன் சென்று பார்த்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம் தயாரிப்பில் உருவான ’சிவாஜி’ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இயக்குனர் ஷங்கர் தனது மகளுடன் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் ’சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து பணி செய்தது தனக்கு மறக்கமுடியாத அனுபவம் என்று கூறினார். மேலும் இந்த சந்திப்பின்போது உங்களது ஆற்றல், பாசம் அனைத்தும் எனது நாட்களை இனிமை ஆக்கியது என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஜினியுடன் ஷங்கரின் மகள் அதிதிஷங்கர் ரஜினியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

இந்த நிலையில் ’சிவாஜி’ படம் குறித்து கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

ஏவி.எம் நிறுவனத்தின்
பெரும் படைப்புகளுள் ஒன்று
ஷங்கர் இயக்க
ரஜினி நடித்த சிவாஜி

15ஆண்டுகளுக்குப் பிறகும்
பெயரைக் கேட்டாலே
சும்மா அதிருது

ஒவ்வொன்றிலும்
உச்சம் தொட்ட படம்

வாஜி வாஜி கேட்கும்போதே
சஹானா சாரல் தூவுகிறது

வாழ்த்துகிறேன்