இயக்குனர் ஷங்கருக்கு சிறப்பு மரியாதை செய்யும் பிரபல தயாரிப்பாளர்: ஆகஸ்ட் 5ல் பிரமாண்ட விழா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கு சிறப்பு மரியாதை செய்ய முடிவு செய்துள்ள பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், அதற்கான தேதியை ஆகஸ்ட் 5 என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று போற்றப்படும் ஷங்கருக்கு சிறப்பு மரியாதை செய்யும் வகையில் அவருக்கு பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. இதற்கான விழா வேல்ஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பிரமாண்டமாக ஆகஸ்ட் 5ஆம் தேதி டாக்டர் பட்டம் அளிக்கும் விழா நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது:
சினிமா என்பது திறமையானவர்கள் வெற்றி பெறும் ஒரு துறையாகும். அவ்வாறு வெற்றி பெற்ற ஒரு திறமையாளருக்கு நாங்கள் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கிறோம்.
கும்பகோணத்தில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த இயக்குனர் ஷங்கர், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தார். அவரது கல்லூரி நாட்களில், அவர் எழுத தொடங்கினார் மற்றும் கலாச்சார நிகழ்வுகளையும் நிகழ்த்தினார். அவருக்கு கிடைத்த கைதட்டல் அவரை மேலும் எழுத தூண்டியது. அவருக்கு நடிப்பு ஆர்வத்தைத் தூண்டியது.
பின்னர், அவர் ஒரு அமெச்சூர் நாடகக் குழுவில் சேர்ந்தார். அங்கு அவர் ஐந்து ஆண்டுகள் நடித்தபோது தான் அவரது நடிப்பு இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் கவனத்தை ஈர்த்தது. அவரை உதவியாளராக தன்னுடன் சேர்த்து கொண்டார். உதவியாளராக பணிபுரிந்த அனுபவத்தின் காரணமாக 1993 இல் வெளியான ’’ஜென்டில்மேன்’’ என்ற படத்தின் மூலம் இயக்குனரான் ஷங்கர், அதன்பின் காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், சிவாஜி, எந்திரன்... என மொத்தம் 25 வருடங்களில் 13 படங்கள் இயக்கினார். அவர் இயக்கிய அத்தனை படங்களும் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், இளையதளபதி விஜய் என பிரபலங்களின் படங்களை இயக்கி வணிக ரீதியாக சூப்பர் வெற்றியை பெற்றார். அவரது படங்கள் பிலிம்பேர் விருதுகள், மாநில விருதுகள் மற்றும் தேசிய விருதுகள் கூட வென்றுள்ளன. ஆனால் மகத்தான வெற்றி பெற்றாலும், 3 குழந்தைகளின் தந்தையான ஷங்கர், எப்போதும் அவர் எளிமையுடன் உள்ளார்.
இன்று, இந்த அதீத திறமையான திரைப்பட கலைஞருக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments