இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம்.. முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து.. வைரல் புகைப்படம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமணம் இன்று சென்னையில் நடந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது மனைவியுடன் வருகை தந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் ஷங்கர் மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் தருண் கார்த்திகேயன் ஆகியவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நிலையில், ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெறும் என்று கூறப்பட்டது. மேலும் கடந்த சில வாரங்களாக ஷங்கர், திருமண அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று சென்னையில் தருண் கார்த்திகேயன் - ஷங்கர் திருமணம் நடந்தது. மணமக்கள் உறவினர்கள் நண்பர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்
அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஷங்கர் மகளின் திருமணத்திற்கு தனது மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களுடன் இணைந்து வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com