என்ன ஒரு கிளைமாக்ஸ்: தினேஷ் கார்த்திக்கை பாராட்டிய ஷங்கர்

  • IndiaGlitz, [Monday,March 19 2018]

நேற்று இந்தியாவின் ஹீரோ தினேஷ் கார்த்திக் தான். கிட்டத்தட்ட கைநழுவி போய்விட்ட ஆட்டத்தை தனது அதிரடி ஆட்டம் மூலம் மீட்டெடுத்து இந்தியாவுக்கு வெற்றியை தேடி தந்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக். 8 பந்துகளில் 29 ரன்கள், அதில் 3 சிக்ஸ் மற்றும் இரண்டு பவுண்டரி என தினேஷ் தன்னுடைய வாழ்நாளின் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தினேஷுக்கு சச்சின் தெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ஹர்பஜன் சிங், விராத் கோஹ்லி, அஸ்வின், உள்ளிட்ட பல கிரிக்கெட் பிரபலங்களும், ஷாருக்கான் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்களை தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் 2.0 படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளுக்கு இடையே நேற்றைய போட்டியை ரசித்து பார்த்த இயக்குனர் ஷங்கர், தனது சமூக வலைத்தளத்தில் தினேஷூக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். ''என்ன ஒரு சிறந்த மறக்க முடியாத கிளைமாக்ஸ் பேட்டிங். ஹீரோ தினேஷ் கார்த்திக்குக்கு வாழ்த்துக்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

ரஜினியின் கட்சி பெயர், கொடி அறிவிக்கும் தேதி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இமயமலையில் ஆன்மீக சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல் போலீசுக்கு ரீல் போலீஸ் வழங்கிய நிதியுதவி

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நடந்த ஒருசில சம்பவங்கள்ல் காவல்துறையின் மீது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், காவல்துறை என்பது மக்களின் சேவையை அடிப்படையாக கொண்ட ஒரு புனிதமான பணி.

சென்னை பாக்ஸ் ஆபீசை கலக்கி வரும் கலகலப்பு2 - நாச்சியார்

மார்ச் 1ஆம் தேதியில் இருந்து புதிய திரைப்படங்கள் வெளிவராததால் ஏற்கனவே வெளிவந்த சுந்தர் சியின் 'கலகலப்பு 2 மற்றும் ஜோதிகாவின் 'நாச்சியார்' ஆகிய படங்கள் சென்னையில் இன்னும் வெற்றிநடை போட்டு வருகிறது.

ஒரே சிக்ஸில் ஹீரோவாக மாறிய தினேஷ் கார்த்திக்

இந்திய கிரிக்கெட் அணியில் தமிழர்கள் இடம்பிடிப்பது ஒரு காலத்தில் அரிதாக இருந்தது. ஆனால் தற்போது இந்திய அணியின் வெற்றியை நிர்ணயிப்பதே நம்ம தமிழக வீரர்கள் என்பது அவ்வப்போது நிரூபணம் ஆகி வருகிறது.

தினேஷ் கார்த்திக்கை பாராட்டாத முரளிவிஜய்: வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

தமிழகத்தை சேர்ந்த இன்னொரு கிரிக்கெட் வீரரான முரளிவிஜய், வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் என்று தனது டுவிட்டில் பதிவு செய்துள்ளார்.