'பெரியப்பா அனுபவத்தை கொடுத்தது': ஷங்கர் பாராட்டிய சூப்பர்ஹிட் படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பெரியப்பா அனுபவத்தை கொடுத்தது என சூப்பர் ஹிட் படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைத்தளத்தில் பாராட்டி உள்ளார்.
சமீபத்தில் வெளியான ’கேஜிஎப் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 1100 கோடி ரூபாய் வசூலை தாண்டி இன்னும் வசூல் ஆகிக்கொண்டு இருக்கிறது என்பதும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி விரைவில் இந்த படம் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் ’கேஜிஎப் 2’ படத்தின் இயக்குனருக்கும் படக்குழுவினர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்துள்ளார். ’கேஜிஎப் 2’ படம் பார்த்துவிட்டேன், கதை திரைக்கதை எடிட்டிங் அனைத்தும் சூப்பராக உள்ளது. யாஷ் மிக நன்றாக நடித்துள்ளார். பெரியப்பா அனுபவத்தை கொடுத்த இயக்குனர் பிரசாந்த் நீலுக்கு எனது நன்றி, படக்குழுவினர் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துள்ளார். இயக்குநர் ஷங்கரின் பாராட்டால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Finally saw #KGF2 Cutting edge style Storytelling,Screenplay&Editing.Bold move to intercut action&dialogue,worked beautifully.Revamped Style of Mass 4 the powerhouse @TheNameIsYash Thanks Dir @prashanth_neel 4 giving us a “periyappa” experience.@anbariv Terrific??????to the Team
— Shankar Shanmugham (@shankarshanmugh) May 17, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com