கே.டி.குஞ்சுமோனிடம் ஆசி பெற்ற ஷங்கர்: வைரல் புகைப்படங்கள்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், கே.டி.குஞ்சுமோன் தயாரித்த ’ஜென்டில்மேன்’ என்ற திரைப்படத்தில் தான் இயக்குனராக அறிமுகமானார் என்பதும், அதன் பிறகு கேடி குஞ்சுமோன் தயாரித்த ’காதலன்’ என்ற திரைப்படத்தையும் ஷங்கர் இயக்கினார் என்பதும் அனைவரும் அறிந்ததே. இதனை அடுத்து இருவருக்கும் மன வருத்தம் ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது .

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது கேடி குஞ்சுமோனை சந்தித்து ஷங்கர் ஆசி பெற்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் திருமண வரவேற்பு மே ஒன்றாம் தேதி நடந்த ஷங்கர் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய முதல் பட தயாரிப்பாளர் என்ற முறையில் கேடி குஞ்சுமோன் அவர்களுக்கு தனது மனைவியுடன் சென்று அழைப்பிதழ் கொடுத்துள்ளார். அழைப்பிதழை அன்புடன் பெற்றுக்கொண்ட கே.டி.குஞ்சுமோன், ஷங்கரையும் அவரது மனைவியையும் ஆசீர்வதித்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.