இருக்கிற மரியாதையை கெடுத்துக் கொள்ள வேண்டாம்: கே.பாக்யராஜூக்கு செல்வமணி தரப்பு பதிலடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிப்ரவரி 27ஆம் தேதி இயக்குனர் சங்க தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் கே பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணியும், செல்வமணி தலைமையிலான புது வசந்தம் என்ற அணியும் போட்டியிடுகின்றன.
சமீபத்தில் கே பாக்யராஜ் தனது அணியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசியபோது, செல்வமணி குறித்து கடுமையான விமர்சனம் வைத்தார். குறிப்பாக செல்வமணி இயக்கிய படங்களை எல்லாம் அவர்தான் இயக்கினாரா என்ற சந்தேகம் தனக்கு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் புது வசந்தம் அணியின் செல்வமணி தரப்பில் இதற்கு பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. கே பாக்யராஜ் அவர்கள் மீது தங்களுக்கு மரியாதை இருப்பதாகவும் அந்த மரியாதையை கெடுத்து கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் நான்கு வருடங்களுக்கு மேல் எழுத்தாளர் சங்கத் தலைவராக இருக்கும் பாக்யராஜ் எழுத்தாளர்களுக்கு ஓய்வூதியம் உட்பட எந்த வசதியும் செய்து கொடுக்காமல் இயக்குனர் சங்கத்தில் மட்டும் அந்த வாக்குறுதிகளை கொடுத்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்ட இயக்குனர்களுக்கு மாதம் ரூபாய் 2000 ஓய்வூதியம் தருவதாக இருந்தால் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் செலவாகும் என்றும், எனவே இது நடைமுறைக்கு ஒத்து வராத, செயல்படுத்த முடியாத வாக்குறுதி என்றும் செல்லமணி தரப்பினர் கூறியுள்ளனர்.
பதவிக்காக பாக்யராஜ் பொய் வாக்குறுதிகளை தந்து கொண்டிருப்பதாகவும் அவர் தனக்கு இருக்கிற மரியாதையை கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் செல்வமணி தரப்பினர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments