அந்த நேரத்தில் மட்டும் எந்த முடிவையும் எடுக்காதீர்கள்: செல்வராகவனின் இன்றைய பொன்மொழி!

பிரபல இயக்குநர் செல்வராகவன் தனது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் கடந்த சில நாட்களாக அவர் அவ்வப்போது பொன்மொழிகளை பதிவு செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

ஏற்கனவே கடந்த சில நாட்களில் ’வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் நான்தான் காரணம் என்று பழி போட்டுக் கொள்ளாதீர்கள். மற்றவர்கள் பாவத்தை நாம் சுமந்தது போதும்’, ‘ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மனதை குத்தி ,கிழித்து ,உடைத்து சுக்கு நூறாய் போட்ட காதல் ஒன்று இல்லாமல் இருக்காது’ ஆகிய பொன்மொழிகளை பதிவு செய்த நிலையில் இன்று மேலும் ஒரு பொன்மொழியை பதிவு செய்திருக்கிறார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: தயவு செய்து வேதனையின் உச்சத்தில் இருக்கும் போது எந்த முடிவும் எடுக்காதீர்கள். இரண்டு நாட்கள் கழித்து யோசிப்போம் என்று விட்டு விட்டு நன்கு உணவருந்தி ஓய்வெடுங்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு ஒன்று பிரச்சனையே இருக்காது இல்லை நீங்கள் முடிவெடுக்கும் மனநிலையில் இருப்பீர்கள்.

இந்த நிலையில் இயக்குநர் செல்வராகவன் தற்போது ‘சாணிக் காகிதம்’ மற்றும் ’பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனுஷ் நடிக்கும் ’நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாகவும், இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.