close
Choose your channels

மாஸ் நடிகருடன் முதல்முறையாக செல்வராகவன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

Wednesday, October 25, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'பீஸ்ட்’, ‘சாணி காகிதம்’ ’நானே வருவேன்’ ’பகாசூரன்’ ’மார்க் ஆண்டனி’ ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. தனுஷின் ’D50’ திரைப்படத்தில் அவர் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் பிரபல மாஸ் நடிகருடன் இணைந்து நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு பிரபல நடிகர் ரவி தேஜா நடிக்க இருக்கும் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளனர். இந்த படத்தை பல வெற்றி படங்களை அளித்த கோபிசந்த் இயக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் செல்வராகவன் நடிக்க இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்

அது மட்டும் இன்றி இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் செல்வராகவன் முதல் முறையாக தெலுங்கு திரையுலகில் களத்தில் இறங்க இருப்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment