ஊரடங்கு நேரத்தில் நடந்த அஜித் இயக்குனரின் மகன் திருமணம்!

இந்த ஊரடங்கு நேரத்தில் பல பிரபலங்களின் திருமணங்கள் சப்தம் இல்லாமல் மிகவும் எளிமையாக நடந்து கொண்டிருக்கின்றன என்பது தெரிந்ததே. நடிகர் ராணா, நடிகர் நிவின் உள்பட சமீபத்தில் ஒரு சில திருமணங்கள் மிக எளிமையாக குறைந்த விருந்தினர்களுடன் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அஜித்தை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய இயக்குனர் செல்வாவின் மகன் திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. ’அமராவதி’ என்ற திரைப்படத்தின் மூலம் அஜித் அறிமுகமானார் என்பதும், இந்த திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் செல்வா என்பதும் தெரிந்ததே. மேலும் இவர் ’ஆசையில் ஒரு கடிதம்’ ’நான் அவனில்லை’ ’பூவேலி’ உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் செல்வாவின் மகன் ராஜீவ் சமீபத்தில் திருமணம் நடந்தது. ராஜீவ் ஒரு எஞ்சினியர் என்பதும், மணப்பெண் மீராவும் ஒரு என்ஜினியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணம் விருகம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் மிக எளிமையாக குடும்ப உறுப்பினர்கள் முன் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் செல்வா தற்போது ‘வணங்காமுடி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அரவிந்த்சாமி, சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்து வரும் இந்த திரைப்படம் செல்வாவின் 27 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஒருசில காட்சிகளின் படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருப்பதாகவும் லாக்டவுன்ன் முடிந்தவுடன் அந்த காட்சிகள் படமாக்கப்பட்டு விரைவில் திரைக்கு வரும் என்றும் செல்வா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.