close
Choose your channels

இயக்குனர் சீனுராமசாமியின் அடுத்த படம்.. டைட்டில், ஹீரோ அறிவிப்பு..!

Monday, August 21, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் இந்த படத்தின் ஹீரோ குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘கூடல் நகர்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சீனுராமசாமி இயக்கத்தில் உருவான தென்மேற்கு பருவக்காற்று என்ற படம் தேசிய விருது பெற்றது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த ஆண்டு சீனுராமசாமி இயக்கத்தில் உருவான ’மாமனிதன்’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவரது அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தின் டைட்டில் ’கோழிப்பண்ணை செல்லதுரை’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஏகன் என்ற நடிகர் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். மேலும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை டாக்டர் அருள் நந்து என்பவர் தயாரிக்க உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment